முகமூடி
Tuesday, December 17, 2013
எனக்கு பிடிக்கவில்லை
Sunday, December 8, 2013
திரைப்படம் - மனித மனதுக்கான வடிகால்! திரைப்படம் வணிகமா? கலையா? கலை சார்ந்த வணிகமா? இல்லை அது மனித மனதுக்கான வடிகால்! ஏப்படி?
கிட்டதட்ட இருபத்திமூன்று இருப்பதிநான்கு வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டின் அப்போது இருந்த பொருளாதார சூழ்நிலை காரணமாக, (என்னுடைய தந்தை நான் 4ம் வகுப்பு படிக்கும் போதே தவறிவிட்டார்) நான் 8ம் வகுப்பு முடித்து 9ம் வகுப்பு தொடங்கும் இடைப்பட்ட 2மாத கால பள்ளி விடுமுறையில், ஒரு உணவகத்தில் சுபயோக சுபதினத்தில் வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வயதில், வீட்டின் பொருளாதார சூழ்நிலை பற்றி என் மண்டையில் ஏறவில்லை. எனவே வீட்டாரை சபித்துக் கொண்டே வேலைக்கு சென்றேன். வேலைக்கு சென்றேன் என்றால், வீட்டிலிருந்தெல்லாம் தினமும் செல்லவில்லை. 2மாத காலமும் உணவகத்தில் தங்கி வேலை செய்ய வேண்டும். வீடும் உணவகமும் நான் வசித்த ஊரான மதுரைக்குள் தான் என்றாலும், தினமும் வந்துபோக அனுமதி கிடையாது. இரண்டாவதாக அதற்கும் பேருந்திற்கு செலவாகும். தினமும் சராசரியாக 14மணி நேரம் முதல் 16மணி நேரம் வேலை பெண்டை கழட்டி விடுவார்கள்.
இந்த சொந்த கதை சோக கதையை இத்துடன் நிறுத்திக்கொள்வோம். இல்லையென்றால், நான் ஏதோ உண்மையை ஏழுதினால் கூட, என் மீது கழிவிரக்கம் வருவதற்காக எழுவது போலாகிவிடும். அதனால் இத்துடன் சுபம் போட்டுவிட்டு, சொல்ல வந்த விஷயத்திற்கு போய்விடலாம். அங்கே (நான் வேலை செய்த உணவகத்தில்) மாதச் சம்பளம் போக தினமும் பேட்டா காசு கொடுப்பார்கள். அன்றைய நிலையில் 5ரூபாய் முதல் 7ரூபாய்க்குள். சரியாக கடையை அடைத்து பேட்டா கையில் வந்தவுடன் அருகில் இருக்கும் திரையங்குகளுக்கு பரந்து விடுவேன் அப்போழுது நான் சிறுவன் என்பதால் பெண்கள் கவுண்டரில் புகுந்து ஈசியாக டிக்கெட் எடுத்துவிட முடியும் கிட்டதட்ட 2மாதங்களில் 40படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன். அத்தனையும் இரவு காட்சிகள். 2நாட்கள் பேட்டா காசை சேர்த்தால் படத்திற்கு போய்விடலாம். சில நேரங்களில், ஆள் பற்றாக்குறையால், சில மணி நேரங்கள் கூடுதலாக வேலை செய்து வரும் பணத்தையும் வைத்து, திரைப்படங்களாக பார்த்து தள்ளிக் கொண்டிருந்தேன்.
தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களும், கஞ்சா குடிப்பவர்களும் பெரும்பாலும் உடல் உழைப்பாளிகள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உடல்வலி, மற்றும் எவ்வளவு உழைத்தும் ஏழ்மை. கிட்டதட்ட அந்த வயதில், என்முன் மேற்சொன்ன இரண்டு வாய்ப்புகளும் இருந்தன. என்னுடைய சக தோழர்களாக பணிபுரிந்தவர்களுக்கே அந்த பழக்கங்கள் உண்டு. என்னையும் வற்புறுத்துவார்கள் தவிர்த்துவிடுவேன். மற்றவர்களுக்கு உடல்வலிக்கும், ஏழ்மைக்கும், உடம்பையும், மனதையும் கெடுக்கும் மதுவும், கஞ்சாவும். ஆனால் நான் அந்த இடத்தில் இல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிடுவேன். தேர்தெடுத்து எல்லாம் பார்ப்பதில்லை, அது எம்ஜியாரின் நினைத்ததை முடிப்பவனாகவும் இருக்கலாம், கமலின் வெற்றி விழாவாகவும் இருக்கலாம். அந்த சமயத்தில் நான் பக்கா ரஜினி ரசிகன். அந்த வயதில் வீட்டின் பொருளாதார சூழ்நிலை புரியாமல் இப்படி நம்மை வேலைக்கு அனுப்பி விட்டார்களே என்ற எரிச்சல், எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட தாழ்வு மனப்பான்மை, 16மணி நேரம் சக்கையாக பிழிந்தேடுக்கும் வேலைபளு, இப்படி எல்லாவற்றையும் தூக்கி ஒரு மூலையில் கிடாசிவிட்டு, இவையனைத்தையும் மறந்து இரண்டரை மணிநேரங்கள் திரையரங்கினுள் அமர்ந்திருக்கும் அந்த தருணங்களை வாழ்வில் மறக்கவே முடியாது. என்னை பொருத்தவரை அந்த வயதில் எனக்கு அது ஒரு தியானத்தை போல என்று சொன்னால், அது மிகையல்ல.
திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமலே இருந்திருந்தால், அப்போழுது இருந்த சூழலில் நான் மிக மோசமான மனிதனாக மாறியிருக்க 100சதவித வாய்ப்புகள் கண்முன்னே இருந்தது. அந்த வயதில் வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொள்ள முடியாமல், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், தடுமாறிய என்னுடைய மனதிற்கு மிகச்சிறந்த வடிகாலாக இருந்தது திரைப்படங்களே. இப்படி நான் மட்டுமல்ல, கிட்டதட்ட அதன் பிறகு 13 வருடங்கள் அதே உணவகத்துறையிலேயே (இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வெவ்வெறு காரணங்களால் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன்) என்னுடன் பணிபுரிந்த நிறைய நண்பர்களுக்கு திரைப்படம் பார்ப்பதும் அதை பற்றி விவாதிப்பதும் தான் எங்களின் கஷ்டங்களை மறக்கும் அற்புதமான தருணங்கள். இப்போழும் நிறைய சந்தர்ப்பங்களில் நண்பர்களுடன் விவாதிக்கும் போது, அது எதை பற்றியதாக இருந்தாலும் என்னுடைய கருத்துக்கள் நான் பார்த்த திரைப்படத்தில் இருந்து தான் வரும், உதாரணத்திற்கு எனக்கு இப்பொழுது திருமணமாகிவிட்டது. என் மனைவியிடம் அவ்வை சண்முகியில் வரும் ஒரு காட்சியை பற்றி அடிக்கடி சொல்லிக்காட்டி கொண்டே இருப்பேன். அப்படத்தில் வரும் ஒரு காட்சியில், கமலும் மீனாவும் தங்களுக்கு திருமணமானவுடன் ஒரு பிள்ளையார் சிலை முன்பு நின்று வேண்டுவார்கள். அப்போழுது கமல், மீனாவிடம் நீ என்ன வேண்டினாய் என்று கேட்பார். அதற்கு மீனா, நாம் இருவரும் வாழ்வின் கடைசி நிமிடம் வரை சண்டை போடாமல் விட்டுக்கொடுத்து இணைபிரியாமல் சந்தோசமாக வாழ வேண்டும் என்று வேண்டினேன் என்பார். அதற்கு கமல், அது நமக்கே தெரிய வேண்டாமா, இதை எதற்கு கடவுளிடம் வேண்ட வேண்டும் என்பார். மிக அட்டகாசமான காட்சி அது. திருமணமாகி கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் பல தம்பதிகளை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கான சம்மடி அடி காட்சி அது. அவ்வைசண்முகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் என்றாலும், சினிமா என்பது கலை, அது வெறும் வணிகம் கிடையாது என்று சொல்லும் நண்பர்களால், கழுவிகழுவி ஊற்றப்பட்டது. இருக்கலாம் ஆனால் ஒரு திரைப்படம், அது கலை படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, இல்லை இரண்டும்கெட்டானக இருந்தாலும் சரி, அரங்கினுள் வந்தமரும் ரசிகனை அவன் வாழ்வியலோடு இணைத்து பார்க்கும் காட்சிகளோடு பொருந்திபோய்விட்டாலே படம் வெற்றி தான். என்னை பொருத்தவரை எனக்கும் சரி என்னோடு இப்போழுதும் பயணித்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட நண்பர்களுக்கும் சரி எங்களின் கஷ்டங்களையும் மனவேதனைகளையும் மறக்கச்செய்து இன்றும் எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் திரைப்படம் தான் எங்களுக்கான பகவத்கீதை வேதாகமம் திருக்குரான் எல்லாம், இதை படிக்கும் சில நண்பர்களுக்கு நான் சொல்வது மிகையாக கூட இருக்கலாம். எங்களிடத்தில் இருந்து வாழ்ந்து பார்த்தால் தான் அதை உணர முடியும்.
அதனால் தான் சொல்கிறேன் இன்றைக்கும் சரி என்றைக்கும் இங்கே உள்ள மக்கள் சார்ந்த சமூகம் ஒன்றும் அடிமுட்டாள்கள் கிடையாது. ஒரு திரைப்படம், அது கலை படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, இல்லை இரண்டும்கெட்டானக இருந்தாலும் சரி, அரங்கினுள் வந்தமரும் ரசிகனை அவன் வாழ்வியலோடு இணைத்து பார்க்கும் காட்சிகளோடு பொருந்திபோய்விட்டாலே படம் வெற்றி தான். ஆனால் இங்கே பொதுவான ஒரு கருத்து ஒரு சாரரால் எப்பொழுதும் வலியுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது அது தமிழின் கமர்சியல் படங்கள் என்று அறியப்படும் படங்கள், பெரும் தோல்வியடைய வேண்டும், யதார்த்தமான படங்கள் மட்டுமே வெற்றியடைய வேண்டும் என்றும், இந்த சமூகம் அதை செய்ய தவறுகிறது, அதனால் இந்த சமூகம் உருப்படவே உருப்படாது என்ற கருத்தை வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிபட்ட நல்ல படமாக வலியுறுத்தப்பட்டு வெளியான ஒரு திரைப்படம் மிகப்பெரிய தோல்வியானது ஏன்? அது எந்த திரைப்படம்? இன்னுமொரு சந்தர்ப்பத்தில்.....
Tuesday, December 3, 2013
விடியும்முன் - இது விமர்சனமல்ல ஆனால்? (திரைப்படம் கலையா? வணிகமா? அல்லது கலை சார்ந்த வணிகமா?)
Thursday, November 28, 2013
படித்தவர்களின் மரியாதை?
கடந்த 2வாரங்களுக்கு முன் வெளியான ஆனந்தவிகடனில், (3Dயில் வெளியான முதல் வாரம்) நா.முத்துகுமாரின் தொடரான,
வேடிக்கை பார்பவன் படித்து கொண்டிருந்தபோது பால்ய விஷயங்கள் பலவும் மனதிற்க்குள் தோன்றி மறைந்தன. கடைசியில்
அந்த வண்டிக்காரண்ணே இந்தாங்க தம்பி என்று ஐஸ்கீரிமையும், பாப்கார்னையும் நீட்டி முத்துக்குமாரிடம் சாப்பிட வற்புறுத்தும்
இடத்தில், எனக்கு மனதில் சுரீர்! என்று குத்திய விஷயம் வண்டிக்காரண்ணனின் மரியாதை.
நான் சிறுவயதாக இருந்த பொழுது, அதாவது என்னுடைய 8வது வயதில் என் அம்மாவை பெற்ற பாட்டியின் கிராமத்திற்கு
சென்றிருந்தேன். அங்கே 30வயதை கடந்த ஒருவர் வீட்டுக்குள் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், அவரிடம் என்னை
அறிமுகப்படுத்தி விட்டு அவர் பெயர் சுப்பையா என்றார்கள். அவர் என்னை நீங்க வாங்க போங்க என்று, மிகுந்த மரியாதையோடு அழைத்தார். அவர் வயதிற்க்கு என்னை அவர் அப்படி அழைத்தது எனக்கு மனதிற்குள் ஒரு மாதிரி சங்கடத்தை கொடுத்தாலும், இன்னொருபுறம் கொஞ்சம் படிக்கும் ஆதிக்க மனோபாவம் சந்தோஷப்பட்டது. நான் அந்த திமிரில் அவரை நீ வா போ என்று
ஒருமையில் கூப்பிட, அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதாமல், நான் என்ன வேலை சொன்னாலும் செய்தார். நான்
அப்படி அழைப்பதை பார்த்த என் அம்மா, என்னை அழைத்து கண்டிக்க, நான் என் அம்மாவை மனதிற்க்குள் திட்டினேனே ஒழிய
என் செயலை மாற்றிக்கொள்ளவில்லை. பின்னாட்களில் வாழ்கையின் பல்வேறு படி நிலைகளை கடந்து வந்த பிறகு, இப்பொழுது நினைத்தாலும் நான் எவ்வளவு கேவலமாக நடந்திருக்கிறேன் என்று பல முறை எண்ணி வருந்தியதுண்டு. பின்னாலில்
பெரியவனானதும் அதே சுப்பையா அண்ணன் தோளில் கைபோட்டுக்கொண்டு, நீங்க வாங்க என்று அவர் வயதுக்குரிய
மரியாதையுடன் மிகுந்த சந்தோசத்தோடு பேசியிருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி நம் சமுகத்தில், நான் கவனித்த வரையில், படித்தவர்களுக்கு என்று ஒரு மரியாதையை, குறிப்பாக கிராமத்தில் உள்ள மனிதர்கள் தர தவறுவதில்லை. தான் வயதில்
எவ்வளவு மூத்தவராக இருந்தாலும், தன்னிடம் பேசிக் கொண்டிருப்பவர் படித்தவர் என்று தெரிந்தால், வாங்க தம்பி போங்க தம்பி
என்று மிக மரியாதையோடே அழைக்கிறார்கள். ஆனால் ஒரு சில விதி விலக்குகளை தவிர, பெரும்பான்மை படித்தவர்களிடத்தில்
இந்த பண்பு சுத்தமாக இருப்பதில்லை. அதுவும் கிராமத்துக்காரர் என்று தெரிந்தால் மிக கேவலமாகவே நடந்துகொள்கிறார்கள்.
இவர்கள் படித்த படிப்பில் படிக்காதவர்களை கண்டால் மதிக்காதே என்று, எங்கேனும் சொல்லப்பட்டிருகிறதா தெரியவில்லை.
அதுவும் இக்கால குழந்தைகள் தன்னுடைய அப்பா அம்மாவையே நீ வா போ என்று ஒருமையில் தான் விளிக்கின்றன.
என் மகன், 7வயசு தான் ஆகுது, எனக்கு மரியாதையே கொடுக்கமாட்டான். என்று பெருமையடித்து கொள்ளும் தந்தைகளும்
இருக்கிறார்கள். அவர்களும் மெத்த படித்தவர்கள் என்பது தான் கொடுமையே. படிப்புக்கும் தனி மனித பண்புக்கும் சம்பந்தமேயில்லை என்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன். படித்தவர்கள் தாங்கள் பிறருக்கு (குறிப்பாக படிக்காதவர்களுக்கு) கொடுக்காத
மரியாதையை தங்களுடைய பிள்ளைகளுக்காவது கற்றுக்கொடுத்தால் நல்லது. இல்லையென்றால் அடுத்த தலைமுறை யாரையும்
மதிக்காத தலைமுறையாக்கதான் உருவாகும், பின்பு அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை.
Monday, June 21, 2010
ராவணன் ராவணன் - இந்திய சினிமாவின் சாபக்கேடு
இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர், ஆஸ்கர் விருது புகழ் ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்கள் இருவர், மிக சிறந்த கலை இயக்குநர், மிக பிரம்மாண்டமான இயற்கையான இடங்கள் தமிழிலும், இந்தியிலும் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நல்ல ரசிகர் கூட்டத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்கள் இப்படி பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டி இந்திய ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். மணிரத்தினத்தின் ராவணன் மேலே சொன்னவை அனைத்தும் படம் வெளிவறுவதற்கு முன் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பிம்பங்கள்.
சென்ற வாரம் வெள்ளியன்று படம் வெளியானது. வெளிவருவதற்கு முன் உண்டான எதிர்பார்ப்புகள் அனைத்தும் படம் வெளியான பின் யானை காலில் மிதிபட்ட மனிதனின் தலைபோல் மொத்தமாக நசுங்கிவிட்டது. எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவைகளை தேர்ந்தேடுத்த இயக்குநர், திரைகதையில் கோட்டை விட்டதன் விளைவு படம் அட்சரசுத்தமாக மரண அடிவாங்கியிருக்கிறது. என்னதான் டெக்கினிக்கலாக உலகதரம் என்று மார்தட்டி கொண்டாலும் திரைகதையில் கோட்டைவிட்டால் எவ்வளவு மோசமானதோரு படமாக அது இருக்கும் என்பதற்கு இந்த படம் ஆகச்சிறந்த உதாரணம்.
படத்தின் கதையை ஏற்கனவே நிறைய எழுதிவிட்டார்கள் என்பதால் அது தேவையில்லை. படத்தில் ஒடுக்கப்படும் பழங்குடி மக்களின் தலைவனாக சொல்லப்படும் கதாநாயகன் அம்மக்களின் ஆதரவோடு போலிசுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தி கொண்டே இருக்கிறான் என்பது போன்ற காட்சிகள் படம் முழுவதும். ஆனால் ஏன் அம்மக்கள் போலிசுக்கு எதிராக போராடுகிறார்கள்?, அவர்களின் பிரச்சனை என்ன?, ஏன் அவர்கள் கதாநாயகனை தலைவனாக கருதுகிறார்கள்?, அவன் அம்மக்களுக்காக என்ன செய்தான்?, அம்மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனை என்ன? இப்படிபட்ட பலவிதமான கேள்விகள். ஆனால் இவற்றிற்கான விடை படத்தின் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அதை திரைகதையில் கொண்டு வரும் தைரியம் இயக்குநருக்கு இல்லை. ஒடுக்கப்படும் பழங்குடி மக்களின் பிரச்சனையை ஒரு மேட்டுக்குடியின் பார்வையிலேயே பார்த்தன் விளைவு இது. இந்த லட்சணத்தில் அவரிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் "நாயகன், பாம்பாய், இருவர், குரு என உங்க ளுடைய அனைத்துப் படங்களுமே ஏதேனும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயக்குகிறீர்கள். 'ராவணன்' படத்தில்கூட மாவோயிஸ்ட் பிரச்னையைத் தொட்டிருப்பதாக ஒரு தகவல். உங்கள் படத்தின் மூலம் ஏதேனும் மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று மணிரத்னத்திடம் கேட்க, "ஒரு படம் இயக்கும்போது அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும் சேர்த்துத்தான் படமெடுக்க முடியும். கண்களை மூடிக்கொண்டு கற்பனையான விஷயங்களை வைத்து மட்டுமே படமெடுக்க என்னால் முடியாது. என் படங்களில் உண்மைச் சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால், மெசேஜ் சொல்ல நான் ஒன்றும் அரசியல்வாதியோ, ஞானியோ கிடையாது. என் வேலை படம் எடுப்பது. அதில் மக்களின் உணர்வுகளைச் சொல்கிறேன். அவ்வளவுதான்!" (நன்றி ஆ.வி) எந்த மக்களின் உணர்வை இவர் குறிப்பிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். கொடுமைடா சாமி.
படத்தின் இன்னுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் வையாபுரி திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்திய திரைபடங்களை உலக அரங்குக்கு எடுத்து செல்லும் இயக்குநர், சர்வதேச தரத்தில் படமெடுப்பவர், (தன்னை இயக்குநர் பாலாவின் ரசிகர் என்றுவேறு சொல்லிகொள்பவர்.) இன்றும் இந்திய சினிமாவில் பல இளைஞர்களுக்கு ஆதர்சனம், ஒட்டு மொத்த இந்திய திரைஉலகமே கொண்டாடும் இயக்குநர் என்று போற்றப்படும் ஒருவரால் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் ஒரு திருநங்கையையே நடிக்க வைக்கும் தைரியம் கூட இல்லை. இவர் தான் இந்திய சினிமாவை உலக அரங்குக்கு இட்டு செல்லபவரா? விளங்கிவிடும் இந்திய சினிமா.

Sunday, April 4, 2010
மீண்டும் நீயானா நானாவும் ஆண்களுக்கும் ஆப்பும்
இந்த மாதம் ஒளிபரப்பான நீயா நானாவில் ஒரு தலைப்பு. இன்றைய இளைய சமுதாய ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் எப்படி புரிந்துகொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கிடையே புரிதல்கள் எப்படி இருக்கிறது, பரஸ்பரம் இருவரும் நடந்து கொள்ளும் விதம் மற்றவர்களுக்கு சரியாக புரிகிறதா என்பது தான் தலைப்பு. இன்றைய தலைமுறை ஆண்களும், பெண்களும் தங்களிடமுள்ள எதிர்பாலினத்தின் மீதான சந்தேகங்களை, பரஸ்பரம் கேட்டு தெரிந்து தெளிவாகி கொள்வது தான், நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆண்கள் பகுதியில் இருந்து கேள்விகனைகள் வர ஆரம்பிக்க, கேள்விகளுக்கு பெண்களிடத்திலிருந்து விதவிதமான பதில்கள். அதை ஆண்கள் ஆமோதித்தவாறே கேட்டுக்கொண்டு இருந்தனர். நிகழ்ச்சியும் மிக சுவாரசியமாக ஜாலியாக போய்கொண்டு இருந்தது. இப்பொழுது பெண்களுக்கான நேரம் பெண்கள் கேள்விகள் கேட்க ஆண்கள் பதில் சொல்ல வேண்டும். பெண்கள் கேள்விகள் கேட்க ஆண்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த எனக்கு சிறு நெருடல். தங்களுக்கான கேள்விகளுக்கு பெண்கள் பதில் சொல்லும்போது, பெரும்பாலான ஆண்கள் ஏன் முழுவதுமாக கூட அவர்கள் தரப்பில் இருந்து, ஒரு மறுப்போ பெண்கள் சொல்வது பொய் என்பது போலவோ எந்த ரியாக்சனும் வரவில்லை. பெரும்பாலான பெண்களின் பதில்களுக்கு, ஆண்கள் அதை ஏற்கும் முகபாவத்தோடே கேட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் ஆண்கள் கூறிய எந்த ஒரு பதிலையும், விளக்கத்தையும் பெரும்பாலான பெண்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை என்பது, அவர்கள் முகத்தின் ஒவ்வொரு ரியாக்சனிலும், நடவடிக்கையிலும் அப்பட்டமாக தெரிந்தது. அதை கேமரா ஒவ்வொரு பெண்ணின் அருகாமை காட்சியின் மூலம் காட்டிக்கொண்டே இருந்தது. (கேமராமேன் அனுபவசத்தாராக இருக்ககூடும் மிகச்சரியாக பெண்களை புரிந்துவைத்து காட்டி கொண்டிருந்தார்)
இப்படி போய் கொண்டிருந்த நிகழ்ச்சியில், பெண்களின் ஆடைபற்றி பேச்சு திரும்ப, ஆண்களிடமிருந்து பெண்களின் ஒரு சில ஆடைகளுக்கு ஆட்சேபம் வர, அதற்க்கான காரணத்தை ஆண்களிடத்தில் நிகழ்ச்சியை நடத்தும் கோபி கேட்டபோது, ஆண்களிடதிலிருந்து வந்த பதில், நாங்கள் காதலிக்கும் போது காதலியை மனைவிபோல் தான் பாவிக்கிறோம், அதனால் எங்களின் குடும்ப கெளரவம் கலாசாரம் எல்லாம் என் மனைவியாக வரப்போகும் பெண்ணிடத்திலும் நாங்கள் எதிர்பார்கிறோம். பொதுஇடத்தில் பெண்கள் உடுத்தும் உடை என்பது மிக சென்சிடிவான தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்த காரணத்துக்காவும் எங்கள் குடும்பத்தின் மீதான மரியாதையை குறைக்கும் விதமாக இருக்ககூடாது என்பது ஆண்களின் பதிலாக இருந்தது. இதை குறிப்பாக காதலியை மனைவிபோல் நாங்கள் பாவிக்கிறோம் என்பதை பெண்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி நடத்தும் கோபியே கடுப்பாகி ஏன் காதலிக்கும்போது காதலியை மனைவிபோல் நினைப்பதில் என்ன தவறு என்று கேட்க பதிலே இல்லை. முன்புபோரு முறை நான் நண்பர்களுடன் மாயாஜால் போய் படம் பார்க்கவேண்டும் என்று போயிருந்தோம். அப்போழுது நாங்கள் கண்ட காட்சி நாம் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகத்தை வரவழைத்தது. அதற்கு காரணம் அங்கு வந்த பெண் ஒருவர் உடுத்தியிருந்த உடை அவர் அநேகமாக 12ம் வகுப்போ அல்லது கல்லூரி முதலாம் ஆண்டோ படித்துகொண்டிருக்கலாம். பெண்கள் டென்னிஸில் ஒரு குட்டை பாவடையுடன் ஆடிக்கொண்டிருப்பார்களே அதேதான் அவரின் உடை. கிட்டதட்ட பேண்டிசுக்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அதுவும் எல்லா மக்களும் வந்துபோகும் ஒரு பொது இடத்தில் பெற்றோரோடு சர்வ சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தார். அங்கிருந்த அனைத்து ஆண்களின் கண்களும் ஏன் பெண்களின் கண்கள் கூட அவர் மீது தான் இருந்தது. இது நடந்தது 3வருடங்களுக்கு முன்பு. அப்படியென்றால் கலாசார புரட்சி போகும் வேகத்தில் உடை அளவை நினைத்தால் மயக்கம் தான் வருகிறது. இந்த வேகத்தில் போனால் வருங்கால கணவர்களுக்கு, மனைவியின் உடை விசயத்தில் பெரிய செலவு இருக்காது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் டாக்டர் ஷாலினி. அவர் சொன்ன கருத்து ஆண்கள் பொதுவாக எப்போழுதும் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவதையும் தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் மட்டுமே அதிகம் சிந்திபவர்கள். அதை நோக்கிதான் அவர்கள் ஓடிகொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் தங்களின் சின்ன சின்ன மாறுதல்களுக்கு கூட (உதாரணமாக தான் புதியதாக ஒரு சேலை வாங்கி கட்டினால் கூட அதை ஆண்கள் கவனித்து பாராட்ட வேண்டும் என்று நினைப்பது) ஆண்களிடத்திலிருந்து கருத்தையும், பாராட்டையும் எதிர்பார்கிறார்கள். ஆனால் ஆண்கள் அதை கவனிப்பது இல்லை. இதைபோல் சின்ன சின்ன முக்கியமில்லாத காரணங்களுக்காக தான் குடுப்பத்தில் சண்டையே. இப்படிபட்ட பெண்களிடத்தில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கும் கணவன்மார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அதற்கு அடுத்த வாரம் நீயாநானாவில் செல்போன் பற்றி முக்கியமான விவாதம். விவாதம் சுவாரஸ்யமாக போய் கொண்டிருந்தது இடையில் கோபி ஒரு தரப்பினரை நோக்கி ஒன்றுக்கும் மேற்ப்பட்ட செல்போன்கள் யார் யார் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். 3,4,5 என்று பரவலாக பதில் வந்தது. ஆனால் அதிலிருந்து வந்த ஒரு பெண்ணின் பதில் தான் ஹைலைட்டே அவர் தான் 20செல்போன்கள் வைத்திருப்பதாக சொன்னார். 20செல்போன்கள் என்றவுடன் எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. இத்தைனைக்கும் அந்த பெண்ணின் வயது 19தான். இரண்டு மூன்று செல்போன்கள் வைத்திருப்பவர்கள் சொன்ன காரணங்கள் கூட ஒரளவு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. இன்னொன்று அவர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தார்கள். இந்த பெண் இன்னும் பள்ளி படிப்பயே பூர்த்தி செய்யவில்லை. இதில் அந்த பெண்ணுக்கு தான் 20செல்போன்கள் வைத்திருப்பது சாதனைபோல் காட்டிகொண்டார். அவரின் பெற்றோரை நினைத்து கோபப்படுவதா அல்லது வருத்தபடுவதா தெரியவில்லை. நானும் பல பெண்களிடத்தில் கவனித்திருக்கிறேன். எல்லாமே தேவைக்கு அதிகமாக இருந்தால் கூட அவர்கள் திருப்தி அடைவதில்லை. அது சேலையில் ஆரம்பித்து செருப்பு வரை அனைத்திலும். ஆண்கள் அனைவரும் இவர்கள் தேவையை பூர்த்தி செய்தே தங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டும் போல.

Thursday, March 18, 2010
மாத்தியோசிக்கவேயில்லை.
சில வருடங்களுக்கு முன்பு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த புதுவசந்தம் படம் மாபெரும் வெற்றி, அதை பின்தொடந்து 4கதாநாயகர்கள் 1கதாநாயகியை வைத்து வரிசையாக பல மொக்கை படங்கள் வெளிவந்தன. அத்தனை படத்திலும் கதை என்று ஒன்று மட்டும் இல்லை. புது வசந்தம் ஏற்படுத்திய பாதிப்பில் 4கதாநாயகன் 1கதாநாயகி இருந்தால், படம் ஓடிவிடும் என்று நினைத்து வெளிவந்த அவை சூப்பர் பிளாப் படங்கள்.
அதற்கு பிறகு இப்போழுது ரேணிகுண்டா அண்டாவாக ஏற்படுத்திய பாதிப்பு, அடுத்த படம் போன வாரம் வெள்ளி அன்று வெளிவந்திருக்கிறது. படத்தின் கதையை மட்டும் கொஞ்சம் மாத்தியோசித்திருக்கிறார்கள். (ரேணிகுண்டாவை அப்படியே காப்பி அடித்திருக்குறார்கள், என்று சொல்லிவிட கூடாது இல்லையா. ஆனால் ஒரு விஷயம், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தான் தொடங்கபட்டன, யார் யாரை காப்பி அடித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.)
படத்தின் தலைப்பிலேயே இயக்குநர் தெளிவாக சொல்லிவிட்டார். மாத்தியோசிங்க என்று ஆனால் நான் தான் சுத்த மடையன், கொஞ்சம் மாத்தியோசித்திருந்தால் வேறு படத்திற்க்கு போயிருக்கலாம். நம் தலைவிதி மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி வெளியே வந்ததுதான் மிச்சம். இப்படி மரணஅடி வாங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் அட்சர சுத்தமாக தலைவலி.
படத்தின் கதை வேறொன்றுமில்லை ரேணிகுண்டா படத்தை பார்த்திருப்பவர்கள் அதை கொஞ்சம் மாற்றி ரசிகர்களை தியேட்டரைவிட்டு ஒடவைக்கும் அளவுக்கு மாத்தியோசித்திருக்கிறார்கள். இரண்டு படங்களின் கதையையும் ஒப்பிட்டால் நாடு தாங்காது என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன். படம் முழுவதும் கஷ்டப்பட்டு ஒடிகொண்டிருக்கும் 4நாயகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
டிஸ்கி : படம் பார்க்க செல்வதற்க்கு முன் நான் தான் மாத்தியோசிக்கவேயில்லைலைலை.

Subscribe to:
Comments (Atom)