சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, அப்போழுது நான் சிதம்பரத்தில் ஒரு அசைவ உணவகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த சமயம் ஒரு நாள், அந்த உணவகத்தில் என்னுடன் பணிபுரியும் சைனிஸ் மாஸ்டர் புதியதாக ஒரு உணவு வகையை தயார் செய்தார். அதை சாப்பிட்டு உணவில் இருக்கும் நிறைகுறைகளை சொல்ல வேண்டும். அவர் தெளிவாக, அவ்வுணகத்தில் பணிபுரியும் நாம் யாரும் சாப்பிட வேண்டாம். உணவுத்துறைக்கு சம்பந்தம் இல்லாத, ஆனால் நம் நட்புவட்டத்தில் உள்ள ஒருவரை அழைத்து சாப்பிட சொல்லாம் என்றார். அவரின் அந்த யோசனை எங்கள் அனைவருக்கும் சரியென்று பட்டது. உடனே எங்கள் உணவகத்தின் வாயில் அருகில், கடிகார கடை வைத்து நடத்திகொண்டிருக்கும் நண்பரை அழைத்து, விபரம் சொல்லி, சாப்பிட்டுவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள், உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் பராவாயில்லை, அதற்கு ஏற்றார்போல் அந்த புதிய உணவகையில் மாற்றம் கொண்டுவரலாம் என்றோம். அவரும் அதை சாப்பிட்டு விட்டு அந்த உணவின் சுவை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கு பிறகு அவர் சொன்னது தான் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த சம்பவத்ததை நான் எழுத காரணம். அவர் சொன்னது இது தான் இந்த உணவின் சுவை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக இந்த உணவு நன்றாக இல்லை என்று அர்த்தம் எடுத்து கொள்ளதீர்கள், எனக்கு பிடிக்கவில்லை அவ்வளவு தான். இதே உணவை இங்கு வரும் வாடிக்கையாளர்கள் 10பேரிடமவாது சுவைக்க குடுத்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்றார். ஆனால் இன்று அது எந்த விஷயமாக இருந்தாலும், அது சினிமாவாக இருந்தாலும் சரி, சாப்பாடாக இருந்தாலும் சரி, தங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அதை அசால்டாக நன்றாக இல்லை என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் அதை அனைவருக்கும் பரப்பி விடுகிறார்கள் இது சரியா? உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எனக்கு பிடிக்கவில்லை என்பதோடு நிறுத்திகொண்டால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment