Saturday, March 13, 2010

நீயா நானாவும், ஆண்களுக்கு ஆப்பும்.

சில மாதங்களுக்கு முன்னர் சரியான தேதி நினைவில் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயாநானா நிகழ்ச்சி, அதன் தலைப்பு பெண்கள் தனக்கு வரப்போகும் கணவரிடம் என்னென்ன எதிர்பார்புகளை வைத்திருக்கிறார்கள் என்பது தான். அவர்களின் எதிர்பார்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்க, எனக்கு தலை கிறுகிறுத்து பூமி இரண்டாக பிளப்பது போல் ஒரு பிரம்மை. (ஏனென்றால் நான் திருமணம் ஆகாதவன்) அதில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு, தனக்கு வரப்போகும் வருங்கால கணவன் மாதம் 1லட்சரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வேண்டும், சொந்தமாக நகரத்தின் முக்கியமான இடத்தில் வீடு இருக்க வேண்டும், வங்கியில் வைப்பு தொகையாக 10லட்சம் முதல் 15லட்சம் வரை இருக்க வேண்டும், அப்புறம் சொந்தமாக ஒரு கார், அவ்வளவு தான் என்றாரே பார்க்கலாம். எப்படி நமக்கு தலை சுற்றாமல் இருக்கும். இப்படி பலவிதமான எதிர்பார்ப்புகள் அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் இருந்து வகை வகையாக வந்துகொண்டே இருந்தது. இதில் குறிப்பிட வேண்டிய, விஷயம் இவர்கள் அனைவரும் மெத்த படித்தவர்கள்.

எனக்கு தெரிந்து ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எந்த ஆணாலும், இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலாது. அப்படிப்பட்ட ஆண்கள் சந்தர்ப்பவசத்தால் இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்தால், சொல்லத்தேவையில்லை சத்தியமாக அவர்களின் வாழ்க்கை நரகம் தான். பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அப்படி படித்து வேலைக்கு செல்லும் பெண்களின் எதிர்பார்ப்புகள் தான் மேலே சொன்னது. ஒரு சில பெண்கள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்களின் மனநிலை பணம், வசதி, ஆடம்பரத்தின் மீது தான் இருக்கிறது. அந்த நீயாநானா நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் யாரும் நானும், என் வருங்கால கணவரும் சாகும்வரை காதலோடும் சந்தோசத்தோடும் வாழவேண்டும் என்றோ, எனக்கு வரப்போகும் கணவர், எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒழுக்கமானவராக இருக்க வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை. முதலில் பணம் இருந்தால் போதும், மற்ற விஷயங்களை பற்றி கவலையில்லை என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். சமீபத்தில் உலகம் முழுவதும் ஒர் சர்வே எடுக்கப்பட்டது. அதில் ஆணிடம் கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் பெரும்பாலான ஆண்கள் சொன்னது அரோக்கியமும், அழகும், அன்பும். ஆனால் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதாக சொன்னது. 98% பெண்கள் பணம் பணம் பணம் மட்டுமே. 18% பேர்கள் மட்டுமே அன்பை பற்றி பேசியது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு நிறைய உதாரணங்கள் கடந்த காலத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலைமையில் ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னால்போய் ஒளிந்துகொள்ள பெரும்பாலான பெண்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற போராடி கொண்டிருக்கும் ஒருவனையோ, தோல்வி அடைந்து துவண்டுபோயிருக்கும் ஒருவனையோ இவர்கள் திரும்பிகூட பார்க்க தயாராக இல்லை. அப்படி இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு ஆணுடன் கடைசிவரை சந்தோசமாக வாழ்க்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இவர்கள் திருமணம் முடிந்ததும் செய்யும் முதல் காரியம் கணவனின் குடும்பத்தாரிடம் இருந்து, சில சின்ன சின்ன சப்பை காரணங்களை சொல்லி, அவனை முதல் வேலையாக பிரித்து தனிகுடித்தனம் செல்வது. கணவன் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு குறிப்பிட்ட பிக்ஸ் செய்யப்பட்ட தொகையை மட்டும், மாதா மாதம் அவனின் பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு, மீதி தொகை முழுவதும் தன்குடும்பத்துக்கு மட்டும் தான் என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தன்னுடைய கணவனின் கடந்தகாலத்தை பற்றியும், அதில் அவனின் இந்த வெற்றிக்கு பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது பற்றியும், துளியளவும் கவலையில்லை.

இன்று பல குடும்பங்கள் பிரிந்து நிம்மதியற்ற தனிகுடித்தனமாகவும், பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் போய் தஞ்சமடையும் மிக மிக கேவலமான நிலைமை அதிகமாகி கொண்டே போகிறது. இன்று குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. 2வருடங்களில் 6மடங்கு அதிகமாகி இருக்கிறது. இதில் பெரும்பான்மையான வழக்குகளில் கணவன், மனைவி இருவருமே மெத்த படித்தவர்கள். இன்றைய கல்விமுறை பணம் சம்பாதிப்பதை தவிர ஒரு ம....ரையும் சொல்லி கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட சமூகத்தில் வளரும் குழந்தைகளின் நிலைமை?. நேற்று கூட்டுக்குடும்பங்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்தன. ஆனால் இன்று தனிகுடித்தனத்திலோ, விவாகரத்தான தாயிடமோ, தந்தையிடமோ வளரும் குழந்தைகள் கெட்டு சிரழிய அனைத்து வாய்ப்புகளும் கண்முன்னே இருக்கின்றன. அவர்களை கட்டுபடுத்தி கற்றுதர சுற்றிலும் யாரும் இல்லை. அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இவற்றின் தொடக்கம் எங்கே ஆரம்பிக்கிறது. திரும்பவும் முதல் பாராவில் இருந்து தான் வரவேண்டும்.

5 comments:

Prathap Kumar S. said...

சூப்பர் போஸ்ட் தலைவா... நான் இதைப்பார்க்க வில்லை, ஆனா நீங்க சொன்னதை கேட்டு எனக்கும் தலை கிறுகிறுத்துருச்சு... நானும் திருமணமாகதவன்...

பணம் மட்டும்போதுமா சந்தோஷமான வாழ்க்கைக்கு--? இது அவர்களின் வாழ்க்கையை பற்றி அறியாமையையே காண்பிக்கிறது. என்னத்த சொல்ல...

ஜீவன்சிவம் said...

"திரும்பவும் முதல் பாராவில் இருந்து தான் வரவேண்டும்"

சரியாக சொன்னீர்கள். சொல்லி சொல்லி மடுதாச்சு...யாரு கேட்கறா...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ரொம்ப படிச்சவுங்களுக்குத்தான் ஆசை அதிகமுங்கோ! நான் சொன்னது பொருளாசை

abdul said...

ஆனால் இன்றைய நிலைமையில் ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னால்போய் ஒளிந்துகொள்ள பெரும்பாலான பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.////////// this lines are very real super boss

Venkatesh subramanian said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடய மனமார்ந்த நன்றி. எனது வீட்டில் இணையதள வசதி இல்லாததால் அடுத்த பதிவை ஏற்றும் போதுதான் பின்னூட்டத்தை பார்க்க முடிகிறது. பதிவேற்றம் செய்யும் பிரவுசிங் சென்டரிலும் தமிழ்டைபிங் கிடையாது. அதனால் தாமதமான பதில் பின்னூடதிற்க்கு மன்னிக்கவும். தொடர்ந்து உங்கள் விமர்சன ஆதரவு தேவை.